திருவண்ணாமலை

வறட்சி மாவட்டமாக அறிவிக்கக் கோரி மறியல்

23rd Aug 2019 07:41 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலையை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக் கோரி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்தார். 
போராட்டத்தில் வாக்கடை புருஷோத்தமன், நார்த்தாம்பூண்டி சிவா உள்பட விவசாய சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க 
வேண்டும். மாவட்டத்தில் விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.
செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை முழுவதுமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
பின்னர், மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமியைச் சந்தித்து விவசாயிகள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தினர். அப்போது, உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்தார். 
மறியல் போராட்டத்தால் திருவண்ணாமலை-வேலூர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT