திருவண்ணாமலை

வட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்

23rd Aug 2019 07:39 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை வட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.
திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் திருவண்ணாமலை வட்டத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். 
இவர்களிடையே 14 வயதுக்கு உள்பட்டோர், 17 வயதுக்கு உள்பட்டோர், 19 வயதுக்கு உள்பட்டோர் என 3 பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வென்ற மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT