திருவண்ணாமலை

மண்டல கூடைப்பந்து போட்டி: சண்முகா கல்லூரி சிறப்பிடம்

23rd Aug 2019 07:41 AM

ADVERTISEMENT

மண்டல அளவிலான கூடைப்பந்துப் போட்டியில், திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை கலை, அறிவியல் கல்லூரி வெள்ளிப் பதக்கம் பெற்றது.
வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் வேலூர் மண்டல அளவிலான மாணவர்களுக்கான கூடைப்பந்து போட்டி, திருப்பத்தூர் தூயநெஞ்சகக் கல்லூரியில் 
அண்மையில் நடைபெற்றது. இதில், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் இருந்து பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை கலை, அறிவியல் கல்லூரி சார்பில் பங்கேற்ற மாணவர்கள் வெள்ளிப் பதக்கம் வென்றனர். இவர்களில், பி.எஸ்.சி கணினி அறிவியல் மூன்றாம் ஆண்டு மாணவர் பி.வேல்மாறன், எம்.எஸ்.சி கணினி அறிவியல் முதலாம் ஆண்டு மாணவர் டி.சண்முக சுந்தரம், எம்.ஏ., ஆங்கிலம் முதலாம் ஆண்டு மாணவர் ஆர்.அருணாச்சலம் ஆகியோர் வேலூர் மண்டல கூடைப்பந்து அணிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்கள் வரும் 21-ஆம் தேதி திருப்பத்தூர் தூய நெஞ்சகக் கல்லூரியில் நடைபெறும் திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தின் வேலூர், கடலூர் மண்டலங்களுக்கு இடையிலான போட்டியில் வேலூர் மண்டல அணியில்  பங்கேற்கின்றனர்.
போட்டியில் வென்ற மாணவர்களுக்கு கல்லூரியில் அண்மையில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில், கல்லூரித் தலைவர் எம்.என்.பழனி, கல்லூரிச் செயலர் என்.குமார், பொருளாளர் கோ.ராஜேந்திரகுமார், கல்விப்புல முதன்மையர் அழ.உடையப்பன், கல்லூரி முதல்வர் கே.ஆனந்தராஜ், துணை முதல்வர் கோ.அண்ணாமலை ஆகியோர் பங்கேற்று போட்டியில் வென்ற மாணவர்களைப் பாராட்டி பரிசு வழங்கினர்.
விழாவில், கல்லூரியின் உடல்கல்வி இயக்குநர்கள் எம்.கோபி, ஆர்.மீரா, பயிற்சியாளர் பாலாஜி மற்றும் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT