திருவண்ணாமலை நகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில், 294 மாணவிகளுக்கு இலவச கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டன.
திருவண்ணாமலை லயன்ஸ் சங்கம் சார்பில் நடைபெற்ற விழாவுக்கு, திருவண்ணாமலை அரிமா சங்கத் தலைவர் சிஎஸ்.துரை தலைமை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியை பி.ஜோதிலட்சுமி வரவேற்றார். தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு 294 மாணவிகளுக்கு இலவச கண் கண்ணாடிகளை வழங்கினார்.