திருவண்ணாமலை

மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டம்

18th Aug 2019 03:15 AM

ADVERTISEMENT


திருவண்ணாமலை வருவாய் கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஆக. 20) நடைபெறுகிறது.
திருவண்ணாமலை வருவாய் கோட்டத்துக்கு உள்பட்ட மாற்றுத்திறனாளிகளின் குறைகள், கோரிக்கைகளை நேரில் கேட்டு நிவர்த்தி செய்யும் வகையில் அவ்வப்போது குறைதீர் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, செவ்வாய்க்கிழமை (ஆக.20) காலை 10 மணிக்கு திருவண்ணாமலை கோட்டாட்சியர் ஸ்ரீதேவி தலைமையில் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. திருவண்ணாமலை, முத்துவிநாயகர் கோயில் தெருவில் உள்ள சாரண-சாரணீயர் வளாகத்தில் (பேருந்து நிலையம் அருகில்) நடைபெறும் இந்தக் கூட்டத்தில் திருவண்ணாமலை, செங்கம், தண்டராம்பட்டு, கீழ்பென்னாத்தூர் வட்டங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT