திருவண்ணாமலை, கீழ்நாத்தூர் பகுதியில் உள்ள ஸ்ரீவேடியப்பன் கோயில் குளத்தை தூர்வாரும் பணியில், சனிக்கிழமை நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை, கீழ்நாத்தூரில் ஸ்ரீவேடியப்பன் கோயிலுக்குச் சொந்தமான குளம் உள்ளது. ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ள இந்தக் குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர் வார வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், திருவண்ணாமலை வட்டாட்சியர் கே.அமுல் மேற்பார்வையில் சனிக்கிழமை (ஆக.17) குளம் தூர் வாரும் பணி நடைபெற்றது. போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திர உதவியுடன் தூர் வாரும் பணியில் திருவண்ணாமலை நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். இந்தப் பணி இன்னும் சில நாள்களுக்கு நடைபெறும் என்று நகராட்சி ஊழியர்கள் தெரிவித்தனர்.