திருவண்ணாமலை

அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா

16th Aug 2019 09:16 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் வியாழக்கிழமை சுதந்திர தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
ஆரணி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கூடுதல் மாவட்ட நீதிபதி கே.கணேசன் தேசிய  கொடியேற்றி இனிப்பு வழங்கினார். 
இதில் சார்பு நீதிபதி டி.ஜெயவேல், நீதித்துறை நடுவர் மகாலட்சுமி, அரசு வழக்குரைஞர்கள் கே.சங்கர், வி.வெங்கடேசன், வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர்  ராஜமூர்த்தி மற்றும் வழக்குரைஞர்கள் கலந்துகொண்டனர்.
ஆரணி நகர காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் விநாயகமூர்த்தி தேசியக் கொடியயேற்றி இனிப்பு  வழங்கினார். 
ஆரணி கிராமிய காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர்  ஜெயப்பிரகாசம் தேசியக் கொடியேற்றி இனிப்பு வழங்கினார்.   ஆரணி நகராட்சி அலுவலகத்தில் ஆணையர் அசோக்குமார் தேசியக் கொடியேற்றி  இனிப்பு வழங்கினார். 
ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசனும், மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கோபியும் தேசியக் கொடியேற்றி இனிப்பு வழங்கினர். 
செங்கம்
செங்கம் கிளை நூலகத்தில் வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் செங்கண்மாமுருகு கொடியேற்றினார். நூலகர்கள் காமராஜ், அய்யப்பன், வாசகர் வட்ட துணைத் தலைவர் ஆசைமுஷீர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 
செங்கம் வட்டாட்சியர்அலுவலகத்தில் வட்டாட்சியர் பார்த்தசாரதி கொடியேற்றினார். துணை வட்டாட்சியர் முனுசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 
வந்தவாசி  
 வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் கே.ஆர்.நரேந்திரன் தேசியக் கொடியேற்றினார்.துணை வட்டாட்சியர்கள் சதீஷ், குமரவேல், கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  
  வந்தவாசி நகராட்சி அலுவலகத்தில் ஆணையர் எஸ்.பார்த்தசாரதி தேசியக் கொடியேற்றினார். நகராட்சி மேலாளர் என்.ராமலிங்கம், சுகாதார ஆய்வாளர் பி.ராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
  வந்தவாசியை அடுத்த தெள்ளாரு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் ப.பரணிதரன் தேசியக் கொடியேற்றினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
போளூர்
போளூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் என்.சக்திவேல் தேசியக் கொடியேற்றினார். அரசு மாணவிகள் விடுதி  மாணவிகளுக்கு கவிதை கட்டுரை, பேச்சு என பல்வேறு போட்டிகள் நடத்தி, வெற்றிபெற்ற மாணவிகளுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கா.ஆனந்தன், ஆர்.சக்திவேல்  ஆகியோர் பரிசு வழங்கினர்.
துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயலட்சுமி, அகிலாடேஸ்வரி, புனிதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT