திருவண்ணாமலை

பைக் மோதியதில் முதியவர் பலி

11th Aug 2019 02:01 AM

ADVERTISEMENT


செய்யாறு அருகே சாலையோரமாக நடந்து சென்ற முதியவர் பைக் மோதியதில் உயிரிழந்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரை அடுத்த இனாம்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தாமரை (72). இவர், செய்யாறு அருகே செல்லபெரும்புலிமேடு கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்குச் செல்வதற்காக பேருந்து மூலம் அழிஞ்சல்பட்டு கிராமத்துக்கு வெள்ளிக்கிழமை வந்தார். பின்னர், அங்கிருந்து செல்லபெரும்புலிமேடு கிராமத்துக்கு சாலையோரமாக நடந்து சென்றார். அப்போது, அந்த வழியாக வந்த பைக், செந்தாமரை மீது மோதியதாகத் தெரிகிறது. இதனால் பலத்த காயமடைந்த அவரை அந்தப் பகுதியினர் மீட்டு, செய்யாறு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தாமரை, அங்கு உயிரிழந்தார்.
விபத்து குறித்த புகாரின்பேரில், தூசி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT