திருவண்ணாமலை

அத்திவரதரின் சிறப்பு தபால் உறை விற்பனை

11th Aug 2019 02:00 AM

ADVERTISEMENT


திருவண்ணாமலை, ஆரணி தலைமை தபால் நிலையங்களில் காஞ்சிபுரம் அத்திவரதர் சிறப்பு தபால் உறை விற்பனை செய்யப்பட்டு வருவதாக திருவண்ணாமலை கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் அமுதா தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தபால் துறை சார்பில் காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவத்தையொட்டி, சிறப்பு தபால் உறை ஜூலை 18-ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இந்தத் தபால் உறை திருவண்ணாமலை, ஆரணி பகுதிகளில் உள்ள தலைமை தபால் நிலையங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 
இதன் விலை ரூ.20-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் தபால் உறையை வாங்கிப் பயன்பெறலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT