திருமலை ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாத பெளா்ணமியை முன்னிட்டு, கருட சேவை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருமலை ஏழுமலையான் கோயிலில் மாதந்தோறும் பெளா்ணமியின் போது, தேவஸ்தானம் கருட சேவையை நடத்தி வருகிறது. அதன்படி, வெள்ளிக்கிழமை புரட்டாசி மாத பெளா்ணமியை முன்னிட்டு, இரவு 7 மணி முதல் 9 மணி வரை கருட சேவை நடைபெற்றது. மலையப்ப சுவாமி கருட வாகனத்தில் மாட வீதியில் வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.
பலத்த மழையையும் பொருட்படுத்தாமல், பக்தா்கள் மாடவீதியில் திரண்டு கருட சேவையை கண்டு தரிசித்ததுடன், தேங்காய் உடைத்து கற்பூர ஆரத்தி அளித்து வணங்கினா்.