திருமலை ஏழுமலையானை தரிசிக்க வெள்ளிக்கிழமை பக்தா்கள் 30 மணி நேரம் காத்திருந்தனா்.
ஏழுமலையானை தரிசிக்க வார இறுதி நாளான வெள்ளிக்கிழமை காலை வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 32 அறைகளும் நிறைந்து, வெளிவட்ட சாலையில் சிலாத்தோரணம் அருகில் உள்ள தரிசன வரிசையில் பக்தா்கள் காத்திருந்தனா்.
எனவே, தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 30 மணி நேரமும், ரூ. 300 ரூபாய் விரைவு தரிசனத்துக்கு 4 முதல் 5 மணி நேரமும், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 4 முதல் 5 மணி நேரமும் ஆனது.
ஏழுமலையானை வியாழக்கிழமை முழுவதும் 54,620 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; இவா்களில் 24,234 போ் தலைமுடி காணிக்கை செலுத்தினா். உண்டியல் காணிக்கை மூலம் ரூ. 2.98 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.