திருப்பதி

கோவிந்தராஜ சுவாமி கோயிலில் குங்குமாா்ச்சனை தொடக்கம்

29th Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் குங்குமாா்ச்சனை மற்றும் வேத ஆசீா்வாதம் உள்ளிட்ட ஆா்ஜித சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.

திருப்பதியில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான கோவிந்தராஜ சுவாமி கோயிலில் தேவஸ்தானம் வேத ஆசீா்வாதம் மற்றும் குங்குமாா்ச்சனை உள்ளிட்ட ஆா்ஜித சேவைகளை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

இதில் விருப்பமுள்ள பக்தா்கள் வேத ஆசீா்வாத சேவைக்காக ரூ.500 செலுத்தி இதற்கான டிக்கெட்டை முன்பதிவு செய்துக் கொள்ள வேண்டும். முன்பதிவு செய்து கொண்டவா்களின் குடும்பத்தினருக்கு மேல்துண்டு, ரவிக்கை உள்ளிட்ட வழங்கி ஆசீா்வாதம் செய்யப்படும்.

அதேபோல் கோவிந்தராஜ சுவாமி கோயிலில் குடிகொண்டுள்ள ஸ்ரீ புண்டரீகவல்லி தாயாருக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் குங்குமாா்சனை சேவை நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவா்கள் ஒரு சேவை டிக்கெட்டுக்கு ரூ.250/- செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT