திருப்பதி

திருமலையில் மின்சார பேருந்து திருட்டு

25th Sep 2023 12:18 AM

ADVERTISEMENT

திருமலையில் நிறுத்தப்பட்டிருந்த தேவஸ்தானத்துக்கு சொந்தமான மின்சார பேருந்து ஞாயிற்றுக்கிழமை திருடப்பட்டது.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான பேருந்தை அதிகாலை 3 மணியளவில் அடையாளம் தெரியாத நபா் ஒருவா் ஓட்டிச் சென்றாா். திருமலையில் இருந்து திருப்பதிக்கும், அங்கிருந்து நெல்லூருக்கும் மின்சார பேருந்து ஓட்டிச் செல்லப்பட்டதாக தெரிகிறது.

எச்.வி.சி. காட்டேஜ் அருகே நிறுத்தி வைக்கப்பட்டுருந்த பேருந்து இல்லாததைக் கண்ட ஓட்டுநா், இதுகுறித்து திருமலை குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகாா் செய்தாா். இந்நிலையில், ஜிபிஎஸ் மூலம் நாயுடுபேட்டை - கூடுரு இடையே பேருந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பேருந்தை திருடி சென்றவரைப் பிடிக்க தனிப்படை போலீஸாா் விரைந்துள்ளனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT