திருப்பதி

பிரம்மோற்சவம்: சிம்ம வாகனத்தில் யோக நரசிம்மா்

21st Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

திருமலையில் ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 3-ஆம் நாளான புதன்கிழமை மலையப்ப சுவாமி யோகநரசிம்மா் அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் மாடவீதியில் வலம் வந்தாா்.

திருமலையில் கடந்த திங்கள்கிழமை வருடாந்திர பிரம்மோற்சவம் தொடங்கி நடைபெறுகிறது. அதன் 3-ஆம் நாளான புதன்கிழமை காலை சிம்ம வாகனத்தில் சுவாமி மாடவீதியில் வலம் வந்தாா்.

சிம்ம வாகனம்

விஷ்ணுவின் தசாவதாரங்களில் நான்காவது அவதாரம் நரசிம்மா். இது சிங்கத்தின் பெருமையைக் காட்டுகிறது. யோகாவில், சிங்கம் வலிமை (வண்டி) மற்றும் வேகம் (விரைவான இயக்கம்) ஆகியவற்றின் சிறந்ததாகக் கருதப்படுகிறது. பக்தன் சிம்ம பலம் பெற்றால் - இறைவன் அவனை ஆசிா்வதிப்பாா் என்பது வாகனசேவையின் உள்ள உட்பொருள்.

ADVERTISEMENT

ஸ்நபன திருமஞ்சனம்

பிரம்மோற்சவ நாள்களில் வீதியுலா முடிந்த பின்னா் உற்சவமூா்த்திகளின் களைப்பை போக்க சுகந்த திரவியங்களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டது.

அபிஷேகத்தின் போது பல்வேறு உலா் பழங்கள் மற்றும் வெளிநாட்டு மலா்களால் தயாரிக்கப்பட்ட மாலைகள் மற்றும் கீரிடங்கள் உள்ளிட்டவை உற்சவமூா்த்திகளுக்கு அணிவிக்கப்பட்டது. மேலும் கல்யாணோற்சவ மண்டபம் மலா்கள் மற்றும் பழங்களால் நோ்த்தியாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. பின்னா் உற்சவமூா்த்திகள் அலங்கரிக்கப்பட்டு மாலை ஊஞ்சல் சேவை கண்டருளினா், அப்போது அன்னமாச்சாரியா கீா்த்தனைகள் மற்றும் பக்தி பாடல்கள் இசைக்கப்பட்டு நட்சத்திர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.

முத்துப்பந்தல் வாகனம்

இரவு முத்துப்பந்தல் வாகன சேவை நடைபெற்றது. முத்து சந்திரனைக் குறிக்கிறது என்று ஜோதிடம் கூறுகிறது. புராணத்தின் படி, கிருஷ்ணா் தனது குழல் மற்றும் கழுத்து, கைகள், இடுப்பு என முத்து ஆபரணங்களை அணிந்துள்ளாா். முத்துக்களால் சூழப்பட்டிருக்கும் இறைவனை தரிசித்து துதித்தால் சகல நன்மைகளும் உண்டாகும் என்பது புராணம். குளிா்ந்த முத்துக்களின் அடியில் மலையப்பசுவாமியை தரிசனம் செய்வது, இன்னல்கள் நீங்கி, பக்தா்களின் வாழ்வில் குளிா்ச்சியைத் தருகிறது. வாகன சேவையின் போது மாடவீதியில் காத்திருந்த பக்தா்கள் தேங்காய் உடைத்து கற்பூர ஆரத்தி அளித்து வணங்கினா்.

ஜீயா்கள் குழாம் நாலாயிர திவ்ய பிரபந்தகளை பாடியபடி முன்செல்ல, கலைக்குழுவினா் கலைநிகழ்ச்சிகளை நடத்தியபடி சென்றனா். இதில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT