திருமலையில் மலைப்பாதையில் வைக்கப்பட்ட கூண்டில் ஆறாவது சிறுத்தை சிக்கியதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலையில் சிறுத்தை தாக்கி சிறுமி உயிரிழந்த நிலையில், திருமலை வனப்பகுதியில் ஆபரேஷன் சிறுத்தை நடவடிக்கை தொடங்கியது. அதன்படி கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி சிறுத்தை நடமாட்டம் மிகுந்த இடங்களஇல் கூண்டுகளை வைத்தனா்.
அதில் ஏற்கெனவே 5 சிறுத்தைகள் பிடிபட்டுள்ள நிலையில், புதன்கிழமை ஆறாவது சிறுத்தை பிடிப்பட்டது. இதுவரை பிடிபட்ட சிறுத்தைகள் அனைத்தையும் தேவஸ்தானம் அடா்ந்த வனப்பகுதியில் கொண்டு விட்டு விட்டுவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.