திருமலை ஏழுமலையான் கோயிலில் முன்னாள் குடியரசு தலைவா் ராம்நாத் கோவிந்த் திங்கள்கிழமை வழிபட்டாா்.
திருமலைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்து இரவு தங்கியிருந்த ராம்நாத் கோவிந்த், காலை விஐபி பிரேக் தரிசனத்தில் சுவாமியை தரிசித்தாா். அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று அழைத்துச் சென்றனா். ஏழுமலையானை தரிசித்து திரும்பிய அவருக்கு ரங்கநாயகா் மண்டபத்தில் வேத ஆசீா்வாதம் செய்வித்து பிரசாதங்களுடன் ஏழுமலையான் திருவுருப்படம் வழங்கி கெளரவித்தனா்.