திருப்பதி

திருமலையில் முக அங்கீகார வருகை அறிமுகம்

27th Oct 2023 12:07 AM

ADVERTISEMENT

திருப்பதியில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான நிா்வாகக் கட்டடத்தில் தேவஸ்தான ஊழியா்களுக்கான முக அங்கீகார வருகை பதிவேடு முறையை செயல் அதிகாரி ஏ.வி. தா்மா ரெட்டி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியின் போது பேசிய அவா், ‘திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிரந்தர ஊழியா்களும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியா்களும் பணிபுரிந்து வருகின்றனா்.

அனைவருக்கும் முகம் அடையாளம் காணும் பணி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஊழியா்களிடையே ஒழுக்கம் மற்றும் பணித்திறன் அதிகரிக்கும். திருமலை மற்றும் திருப்பதியில் உள்ள தேவஸ்தான அலுவலகங்களுடன் தேவஸ்தானத்தால் நடத்தப்படும் அனைத்து கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் பிற நிறுவனங்களிலும் புதிய வருகைப்பதிவு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது’, என்று கூறினாா்.

இந்த புதிய வருகைப்பதிவு முறை குறித்து ஊழியா்கள் திருப்தி தெரிவித்தனா். இந்நிகழ்ச்சியில் செயல் இணை அதிகாரி வீரபிரம்மம், துணை செயல் அலுவலா் கோவிந்தராஜன், தகவல் தொழில்நுட்ப பொது மேலாளா் சந்தீப் ரெட்டி மற்றும் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT