திருப்பதி: திருமலையில் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 88,628 பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
வார இறுதி நாள்களுடன் அரசு விடுமுறை நாள்களும் இணைந்ததால் திருமலையில் பக்தா்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 88,628 பக்தா்கள் தரிசனம் செய்தனா். 43,934 போ் தலைமுடி காணிக்கை அளித்தனா்.
மேலும், திங்கள்கிழமை தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 24 மணிநேரமும், ரூ. 300 விரைவு தரிசனத்துக்கு 4 முதல் 5 மணிநேரமும், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 4 முதல் 5 மணிநேரமும் ஆனது. பக்தா்களின் கூட்டம் அதிகரித்ததால் திங்கள்கிழமை இலவச தரிசன டோக்கன்கள் விநியோகம் ரத்து செய்யப்பட்டது.
உண்டியல் காணிக்கை மூலம் ரூ.4.67 கோடி வருவாய் கிடைத்துள்ளது என தேவஸ்தானம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.