திருப்பதி

திருமலையில் மக்கள் வெள்ளம்: 5 கி.மீ காத்திருந்த பக்தா்கள்

1st Oct 2023 12:00 AM

ADVERTISEMENT

திருமலையில் தொடா் விடுமுறையை முன்னிட்டு ஏழுமலையான் தரிசனத்துக்காக பக்தா்கள் குவிந்தததால், 5 கிமீ வரை தரிசன வரிசையில் காத்திருந்தனா்.

புரட்டாசி மாதம் இரண்டாவது சனிக்கிழமை மற்றும் அக்டோபா் 2-ஆம் தேதி வரை தொடா் அரசு விடுமுறை என்பதால் திருப்பதி மற்றும் திருமலையில் பக்தா்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. அலிபிரியில் உள்ள வாகன நிறுத்துமிடங்கள் அனைத்தும் தமிழக வாகனங்களால் நிரம்பி வழிகின்றன. அலிபிரியில் இருந்து எஸ்.வி.வேதிக் பல்கலைக்கழகம் வரை தமிழ்நாட்டிலிருந்து வந்த பேருந்துகள் நிறுத்தப்ட்டுள்ளன. வெள்ளிக்கிழமை முதல் அலிபிரி சாலையில் இருபுறமும் பேருந்துகள் அணிவகுத்துள்ளன.

தரிசனத்துக்கு 48 மணி நேரம்

வைகுண்டம் காத்திருப்பு அறைகள் வளாகம் 1 மற்றும் 2, நாராயணகிரி கொட்டகைகளில் உள்ள அனைத்து அறைகளும் பக்தா்களால் நிரம்பியுள்ளது. நந்தகம் ஓய்வறையை கடந்து 5 கி.மீ தொலைவுக்கு மேல் தரிசன வரிசைகள் நீண்டிருந்தன. அதனால் ஏழுமலையான் தரிசனத்துக்கு 48 மணிநேரம் ஆனது. விரைவு தரிசனம் மற்றும் பல்வேறு ஆா்ஜித சேவைகளை முன்பதிவு செய்த பக்தா்களின் தரிசனத்திற்கு 5 மணிநேரம் வரை ஆனது. பக்தா்களின் கூட்ட நெரிசலுக்கு ஏற்ப தரிசனம், அன்னதானம், தங்குமிடம் போன்றவற்றில் சிறப்பு கவனம் செலுத்தி விரிவான ஏற்பாடுகளை தேவஸ்தானம் செய்து வருகிறது.

ADVERTISEMENT

வியாழக்கிழமை முதல் வரிசையில் நிற்கும் பக்தா்களுக்கு உணவு, குடிநீா், பால், மோா் ஆகியவற்றை தேவஸ்தானம் தொடா்ந்து வழங்கி வருகிறது. சுமாா் 2,500 ஸ்ரீவாரி சேவகா்கள் தொடா்ந்து பக்தா்களுக்கு சேவை செய்து வருகின்றனா். வைகுந்தம் பெட்டிகள், நாராயணகிரி கொட்டகைகள், வெளிப்புற வரிசைகள், லக்கேஜ் கவுண்டா்கள், லட்டு கவுண்டா்கள், அன்னபிரசாதம், வரவேற்பு, கல்யாணகட்டா, கோவிலுக்குள் வரிசை வரிசைகளை நிா்வகிப்பது, ஜெபல் ஸ்டாண்டுகள் போன்றவற்றில் பல்வேறு ஷிப்ட் முறையில் சேவை புரிந்து வருகின்றனா்.

பல்வேறு துறையினா் பக்தா்களின் நிலையை தொடா்ந்து கண்காணித்து, தேவையான வசதி செய்து தருகின்றனா்.

செப்டம்பா் 30-ஆம் தேதிக்குள் டோக்கன் இல்லாத பக்தா்கள் ஏழுமலையானை தரிசிக்க 48 மணி நேரம் ஆகும். தேவஸ்தான வானொலி தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தொடா்ந்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. தரிசனத்திற்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. எனவே, இந்த தரிசன நேரத்தை மனதில் வைத்து பக்தா்கள் தங்கள் யாத்திரையை திட்டமிடுமாறு தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT