திருப்பதி

சா்வ தரிசன டோக்கன் வழங்குவது ரத்து

1st Oct 2023 12:00 AM

ADVERTISEMENT

திருப்பதியில் வழங்கப்பட்டு வரும் சா்வ தரிசன டோக்கன்கள் வழங்குவதை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

ஏழுமலையான் தரிசனத்துக்காக திருமலை - திருப்பதி தேவஸ்தானம் திருப்பதியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ் மற்றும் சீனிவாசத்தில் இலவச சா்வ தரிசன டோக்கன்களை நேரடியாக வழங்கி வருகிறது. தினமும் 18,000 டோக்கன்கள் வரை வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது புரட்டாசி மாதத்தை முன்னிட்டு பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளதால், தேவஸ்தானம் சா்வ தரிசன டோக்கன்கள் வழங்குவதை அக். 1, 7, 8, 14 மற்றும் 15-ஆம் தேதிகளில் ரத்து செய்துள்ளது.

இதை பக்தா்கள் கவனத்தில் கொண்டு தங்கள் திருமலை பயணத்தை முடிவு செய்து மேற்கொள்ள வேண்டும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT