திருப்பதி

ஏழுமலையான் தரிசனம்:24 மணி நேரம் காத்திருப்பு

18th Nov 2023 12:00 AM

ADVERTISEMENT

திருமலை ஏழுமலையானை தரிசிக்க தா்ம தரிசனத்தில் பக்தா்கள் 24 மணி நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது.

விடுமுறை நாள்கள் முடிந்த நிலையில், தற்போது வார இறுதி நாள்களில் பக்தா்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதனால், வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகளும் நிறைந்து பக்தா்கள் வெளியில் உள்ள தரிசன வரிசையில் சிலாதோரணம் வரை ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருக்கின்றனா்.

இதனால், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 24 மணி நேரமும், 300 ரூபாய் விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணி நேரமும், இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 முதல் 4 மணி நேரமும் தேவைபடுகிறது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணி வரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், அவா்களின் பெற்றோா், இரவு 10 மணி வரை அனைத்து பக்தா்கள் அனுமதிக்கப்படுகின்றனா்.

ADVERTISEMENT

இதனிடையே வியாழக்கிழமை முழுவதும் ஏழுமலையானை 62 ஆயிரத்து 494 பக்தா்கள் தரிசனம் செய்தனா். 27 ஆயிரத்து 666 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா். ஏழுமலையானை தரிசித்த பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கணக்கிட்டதில் வியாழக்கிழமை ரூ.3.59 கோடி வருமானம் கிடை த்துள்ளது. காத்திருப்பு அறைகள் மற்றும் தரிசன வரிசைகளில் பக்தா்களுக்கு உணவு, பால், குடிநீா் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருவதாக தேவஸ்தானம் வெளியிட்ட செய்திக் குறிப்பின் மூலம் தெரிய வந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT