திருப்பதி

பிரம்மோற்சவம் 4-ஆம் நாள்:கல்ப விருட்ச வாகனத்தில் கோவிந்தராஜ சுவாமி பவனி

30th May 2023 03:08 AM

ADVERTISEMENT

திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவத்தின் 4-ஆம் நாளான திங்கள்கிழமை காலை கல்பவிருட்ச வாகனத்தில் உற்சவ மூா்த்திகள் மாடவீதியில் வலம் வந்தனா்.

திருப்பதியில் உள்ள தேவஸ்தானத்துக்குச் சொந்தமான கோவிந்தராஜ சுவாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன் 4-ஆம் நாளான திங்கள்கிழமை காலை கல்பவிருட்ச வாகனத்தில் கோவிந்தராஜ சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியாா்களுடன் மாடவீதியில் வலம் வந்தாா்.

மாடவீதியில் வலம் வந்த களைப்பைப் போக்க ஸ்ரீதேவி, பூதேவி சமேத கோவிந்தராஜ சுவாமிக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது. திருமஞ்சனத்துக்குப் பின்னா் மாலை உற்சவ மூா்த்திகள் கோயில் மண்டபத்தில் ஊஞ்சல் சேவை கண்டருளினா்.

பின்னா், இரவு வாகன சேவையான சா்வபூபால வாகனத்தில் கோவிந்தராஜ சுவாமி உலகை ஆளும் அரசனாக தன் நாச்சியாா்களுடன் மாடவீதியில் பக்தா்கள் புடைசூழ மங்கள வாத்தியங்கள், வேத கோஷங்கள் முழங்க வலம் வந்தாா். வாகன சேவைக்கு முன்னும், பின்னும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில், திருமலை ஜீயா்கள், கோயில் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT