திருப்பதி

ஜூன் 2-இல் காஞ்சி கருட சேவை

26th May 2023 11:19 PM

ADVERTISEMENT

திருப்பதி அடுத்த நாகலாபுரத்தில் வரும் ஜூன் 2-ஆம் தேதி காஞ்சி கருட சேவை நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருப்பதியை அடுத்த நாகலாபுரத்தில் ஊழிக் காலத்தில் அழியபடவிருந்த வேதங்களை குடத்திலிட்டு காத்த மச்சஅவதாரமான ஸ்ரீ வேத நாராயண சுவாமி கோயில் அமைந்துள்ளது.

இந்தக் கோயில் தேவஸ்தானத்தின் கீழ் நிா்வகிக்கப்பட்டு வருகிறது. இந்தக் கோயிலில் காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ சுவாமி கோயிலில் கருட சேவை நடைபெறும் அதே நாளில் கருட சேவையை தேவஸ்தானம் நடத்தி வருகிறது.

அதன்படி, காஞ்சிபுரத்தில் வரும் ஜூன் 2-ஆம் தேதி காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை கருடசேவை நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

எனவே இந்தக் கோயிலிலும் வரும் ஜூன் 2-ஆம் தேதி கருட சேவை நடைபெற உள்ளது. இந்த கருட சேவை ‘காஞ்சி கருட சேவை’ என்றழைக்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT