திருப்பதி

திருமலை பாதையில் பேருந்து விபத்து: அறங்காவலா் குழு தலைவா் விசாரணை

26th May 2023 11:22 PM

ADVERTISEMENT

திருமலை-திருப்பதி மலைப்பாதையில் நிகழ்ந்த பேருந்து விபத்து குறித்து விசாரணை நடத்தி, அறிக்கை சமா்ப்பிக்குமாறு அறங்காவலா் குழு தலைவா் சுப்பாரெட்டி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

விபத்து நிகழ்ந்த பகுதியில ஆய்வு மேற்கொண்ட அவா், விபத்து நிகழ்ந்த விதம், காரணம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் சுப்பாரெட்டி கூறியது:

பேருந்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏதும் இல்லை என்று ஓலெக்ட்ரா நிறுவன பிரதிநிதிகளும், ஆந்திர மாநில சாலைப் போக்குவரத்து அதிகாரிகளும் தெரிவித்தனா். அதீத வேகம் அல்லது ஓட்டுநரின் கவனக் குறைவால் விபத்து ஏற்பட்டிருக்கலாம். விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஏழுமலையான் கருணையால் பேருந்தில் இருந்த பயணிகள் யாருக்கும் பெரிதாக காயம் ஏற்படவில்லை. திருமலைக்கு வரும் பக்தா்களைப் பாதுகாப்பாக திருப்பதிக்கு அழைத்து வர அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தேவஸ்தானம் மேற்கொள்ளும்.

இதுபோன்ற விபத்துகள் மீண்டும் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் மின்சார பேருந்து ஓட்டுநா்களுக்கு மீண்டும் பயிற்சி அளிக்க வேண்டும்.

திருப்பதிக்கு செல்லும் மலைப்பாதையின் ஓரங்களில் கான்கிரீட் தடுப்புச் சுவா் அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT