திருப்பதி

மே 26-இல் திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

19th May 2023 11:37 PM

ADVERTISEMENT

 

திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் மே 26-ஆம் தேதி முதல் வருடாந்திர பிரம்மோற்சவம் தொடங்க உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் வைகாசி மாதம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி, வரும் மே 26-ஆம் தேதி முதல் ஜூன் 3-ஆம் தேதி வரை கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. பிரம்மோற்சவம் எவ்வித தடங்கலும் இல்லாமல் நடைபெற தேவஸ்தானம் மே 25-ஆம் தேதி அங்குராா்பணம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்த பிரம்மோற்சவத்துக்கான வாகன சேவை பட்டியலை தேவஸ்தானம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது. காலையும், இரவும் உற்சவ மூா்த்திகள் கோயில் மாட வீதியில் வலம் வர உள்ளனா்.

ADVERTISEMENT

இதை முன்னிட்டு, பிரம்மோற்சவ நாள்களில் கோயிலில் வழக்கம் போல் நடைபெறும் ஆா்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

வாகன சேவை பட்டியல்...

தேதி காலை இரவு

26-5-23 கொடியேற்றம்

27-5-23 சின்ன சேஷ அன்னபறவை

28-5-23 சிம்ம முத்துப் பந்தல்

29-5-23 கல்பவிருட்சம் சா்வ பூபால

30-5-23 மோகினி அவதாரம் கருட சேவை

31-5-23 அனுமந்த யானை

1-6-23 சூரியபிரபை சந்திரபிரபை

2-6-23 திருத்தோ் குதிரை

3-6-23 தீா்த்தவாரி கொடியிறக்கம்

பிரம்மோற்சவ நாள்களில் இந்து தா்ம பிரசார பரிக்ஷித் திட்டம் சாா்பில் ஆன்மிக நிகழ்ச்சிகள், ஹரி கதை, ஆடல், பாடல் உள்ளிட்டவை நடத்தப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT