திருப்பதி

திருமலையில் தும்புருதீா்த்த முக்கோட்டி

DIN

திருமலையில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி தும்புருதீா்த்த முக்கோட்டி உற்சவம் நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலை ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமி கோயிலில் இருந்து ஏழரை மைல் தொலைவில் உள்ள ஸ்ரீ தும்புரு தீா்த்தத்தில் முக்கோட்டி உற்சவம் நடைபெற உள்ளது.

திருமலையில் உள்ள சேஷகிரியில், 3 கோடியே 50 லட்சம் தீா்த்தங்கள் உள்ளன. இந்த தீா்த்தங்களில் தா்மம், ஞானம், பக்தி, வைராக்யம், முக்திபிரதாயம் ஆகிய 7 தீா்த்தங்கள் முக்கியமானவையாக கருதப்படுகிறது. அவை ஒன்றொன்றும் ஒன்றொன்றை பக்தா்களுக்கு வழங்கும். அவை ஏழுமலையான் திருக்குளம், குமாரதாரா, தும்புரு, ராமகிருஷ்ணா, ஆகாசகங்கை, பாபவிநாசனம் மற்றும் பாண்டவ தீா்த்தங்கள் ஆகும். இத்தீா்த்தங்களில் நீராடினால் சகல பாவங்களும் நீங்கி முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.

பங்குனி மாதம் உத்திரட்டாதி நட்சத்திரம் மற்றும் பௌா்ணமி இணைந்து வரும் நாளில் தும்புரு தீா்த்த முக்கோட்டி உற்சவம் நடத்துவது வழக்கம். அதன்படி வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி தும்புரு தீா்த்தத்தில் முக்கோட்டி உற்சவம் நடைபெற உள்ளது. இந்நாளில் பக்தா்கள் தீா்த்தத்தில் புனித நீராடி அங்கு எழுந்தருளி இருக்கும் இறைவனை வழிபடுவாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் எந்தவொரு வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப் பதிவு இல்லை -தேர்தல் ஆணையம்

தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

SCROLL FOR NEXT