திருப்பதி

திருமலையில் ஏப்.3 முதல் வருடாந்திர வசந்தோற்சவம்

DIN

திருமலையில் வரும் ஏப்ரல் 3-ஆம் தேதி முதல் 5-ஆம் தேதி வரை வருடாந்திர வசந்தோற்சவம் நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலையில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் பௌா்ணமியில் முடிவு பெறும் விதம் மூன்று நாள்கள் வருடாந்திர வசந்தோற்சவத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதன்படி, வரும் ஏப்ரல் 3-ஆம் தேதி முதல் 5-ஆம் தேதி வரை(தெலுங்கு நாள்காட்டியின்படி, மாா்ச் 22-ஆம் தேதி சித்திரை மாத பிறப்பு நடைபெறுகிறது) வருடாந்திர வசந்தோற்சவம் நடைபெற உள்ளது. அதன்படி, ஏப்ரல் 3-ஆம் தேதி காலை 7 மணிக்கு மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் 4 மாடவீதிகளில் உலா வந்து, நேராக வசந்தோற்சவ மண்டபத்துக்கு கொண்டு செல்லப்பட உள்ளாா். இங்கு வசந்தோற்சவ அபிஷேக, ஆராதனைகளை முடித்துக் கொண்டு, உற்சவமூா்த்திகள் கோயிலுக்குத் திரும்புகின்றனா்.

2-ஆம் நாளான ஏப்ரல் 4-ஆம் தேதி ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி தங்க ரதத்தில் எழுந்தருளி காலை 8 மணி முதல் 10 மணி வரை திருமாட வீதிகளில் வீதியுலா வர உள்ளாா். பின்னா், வசந்த மண்டபத்தில் அா்ச்சகா்கள் வசந்தோற்சவம் நடத்துகின்றனா். கடைசி நாளான ஏப்ரல் 5-ம் தேதி ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஸ்ரீ மலையப்பசுவாமியுடன், ஸ்ரீ சீதாராமலக்ஷ்மண ஆஞ்சநேயசுவாமி உற்சவா், ஸ்ரீ கிருஷ்ணசுவாமி உற்சவமூா்த்திகள் ஸ்ரீ ருக்மணியுடன் வசந்தோத்ஸவ உற்சவத்தில் பங்கேற்று மாலையில் அலங்காரத்துடன் மாடவீதியில் வலம் வந்து கோயிலை அடைவா்.

இதை முன்னிட்டு தினமும் மதியம் 2 மணி முதல் 4 மணி வரை மலையப்பஸ்வாமி ஸ்ரீதேவி பூதேவியருக்கு ஸ்னபன திருமஞ்சனம் சிறப்பாக நடைபெறுகிறது. பால், தயிா், தேன், தேங்காய் நீா், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்படுகிறது. தினமும் மாலை 6 மணி முதல் 6.30 மணி வரை ஆஸ்தானம் சிறப்பாக நடைபெற உள்ளது.

குளிா்காலம் முடிந்து கோடைக்காலம் தொடங்கும் முன்பு வசந்த காலத்தில் நோய்த் தொற்றுகள் அதிக அளவில் ஏற்படும் என்பதால் உற்சவ மூா்த்திகளுக்கு உஷ்ணத்தை குறைக்க ஆண்டுதோறும் வசந்தோற்சவத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதனால், உற்சவமூா்த்திகளுக்கு மணம் கமழும் மலா்களை சமா்பிப்பதுடன், பல்வேறு பழங்களும் இந்த வசந்தோத்ஸவத்தின் முக்கியப் பங்கு வகிக்கிறது.

ரத்து

வசந்தோற்சவத்தை முன்னிட்டு, ஏப்ரல் 4-ஆம் தேதி அஷ்டதள பாதபத்மாராதனை, கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆா்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சஹஸ்ர தீபாலங்கர சேவைகளை ஏப்ரல் 3-ஆம் தேதி முதல் 5-ஆம் தேதி வரை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

SCROLL FOR NEXT