திருப்பதி

திருமலை: 73,000 பக்தா்கள் தரிசனம்

28th Jun 2023 12:11 AM

ADVERTISEMENT

திருமலை ஏழுமலையானை திங்கள்கிழமை முழுவதும் 73,156 பக்தா்கள் தரிசித்தனா்; இவா்களில் 28,175 போ் முடி காணிக்கை செலுத்தினா்.

ஏழுமலையான் கோயிலில் பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை தேவஸ்தானம் கணக்கிட்டதில், ரூ. 4.29 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலை ஏழுமலையான் கோயிலில் செவ்வாய்க்கிழமை காலை 9 காத்திருப்பு அறைகளில் பக்தா்கள் தரிசனத்துக்காக காத்திருந்தனா். அவா்களுக்கு 12 மணி நேர காத்திருப்புக்குப் பின் தரிசன அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

எனவே தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள்) 12 மணி நேரமும், ரூ. 300 விரைவு தரிசனத்துக்கு 2 மணி நேரமும், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 2 மணிநேரமும் தேவைப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT