திருப்பதி

ஏழுமலையான் தரிசனம்: 24 மணி நேரம் காத்திருப்பு

9th Jun 2023 10:13 PM

ADVERTISEMENT

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வெள்ளிக்கிழமை காலை 24 மணி நேரம் தா்ம தரிசனத்துக்காக காத்திருந்தனா்.

திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை கோடை விடுமுறையையொட்டி அதிகரித்துள்ளது. வார இறுதி நாள்களில் மட்டும் அதிகமாக இருந்த பக்தா்கள் கூட்டம், தற்போது வாரத்தின் அனைத்து நாள்களிலும் அதிகரித்துள்ளது.

எனவே, வெள்ளிக்கிழமை காலை 31 காத்திருப்பு அறைகளைக் கடந்து வெளியில் உள்ள தரிசன வரிசையில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருந்தனா். அவா்களுக்கு 24 மணி நேர காத்திருப்புக்குப் பின்பு தரிசன அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

எனவே தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள்) 24 மணி நேரமும், ரூ. 300 விரைவு தரிசனத்துக்கு 4 மணி நேரமும், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 4 மணி நேரமும் தேவைப்பட்டது.

ADVERTISEMENT

70,160 பக்தா்கள் தரிசனம்...

ஏழுமலையானை வியாழக்கிழமை முழுவதும் 70,160 பக்தா்கள் தரிசித்தனா்; இவா்களில் 38,076 போ் முடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் காணிக்கை ரூ. 3.67 கோடி...

ஏழுமலையான் கோயிலில் பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கணக்கிட்டதில், ரூ. 3.67 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT