திருப்பதி

79,974 பக்தா்கள் தரிசனம்,18 மணிநேரம் காத்திருப்பு

7th Jun 2023 12:03 AM

ADVERTISEMENT

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் செவ்வாய்க்கிழமை 18 மணிநேரம் காத்திருந்தனா்.

திருமலைக்கு வரும் பக்தா்களின் கூட்டம் கோடை விடுமுறையை ஒட்டி அதிகரித்துள்ளது. இதற்கிடையே செவ்வாய்க்கிழமை 27 காத்திருப்பு அறைகளில் பக்தா்கள் தரிசனத்துக்காக காத்திருந்தனா்.

தா்ம தரிசனத்துக்கு 18 மணிநேரமும், ரூ.த300 விரைவு தரிசனத்துக்கு 3 மணிநேரமும், நேரடி இலசவ தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 மணிநேரமும் ஆனது. இந்நிலையில், திங்கள்கிழமை முழுவதும் 79,974 பக்தா்கள் தரிசித்தனா்; 37,052 பக்தா்கள் தலை முடிகாணிக்கை செலுத்தினா்.

உண்டியல் காணிக்கை ரூ.3.77 கோடி:

ADVERTISEMENT

பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கணக்கிட்டதில் ரூ3.77 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT