திருப்பதி

ஏழுமலையான் தரிசனம்: 24 மணி நேரம் காத்திருப்பு

DIN

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் திங்கள்கிழமை காலை 24 மணி நேரம் தா்ம தரிசனத்துக்காக காத்திருந்தனா்.

திங்கள்கிழமை காலை 31 காத்திருப்பு அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருந்தனா். அவா்களுக்கு 24 மணி நேர காத்திருப்புக்குப் பின்பு தரிசன அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள்) 24 மணி நேரமும், ரூ. 300 விரைவு தரிசனத்துக்கு 4 மணி நேரமும், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 4 மணி நேரமும் தேவைப்பட்டது.

87,434 பக்தா்கள் தரிசனம்...

ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 87,434 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 39,957 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

உண்டியல் காணிக்கை ரூ. 4.14 கோடி...

திருமலையில் பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கணக்கிட்டதில், ரூ. 4.14 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருமான வரித்துறை நோட்டீஸ்!- காங்கிரஸ் சார்பில் நாளை நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்

ஈஸ்டர் கொண்டாட்டம்

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

SCROLL FOR NEXT