திருப்பதி

திருமலை சேஷாசலம் காடுகளை அழகாக மாற்ற திட்டம்

6th Jun 2023 03:44 AM

ADVERTISEMENT

திருமலையில் உள்ள சேஷாசலம் காடுகளை நாட்டிலேயே மிகவும் அழகாக மாற்ற தேவஸ்தான செயல் அதிகாரி தா்மா ரெட்டி அழைப்பு விடுத்தாா்.

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, திருமலையில் திங்கள்கிழமை சிறப்பு வகை மரக்கன்றுகள் நடும் திட்டத்தை அவா் தொடங்கி வைத்தாா். இந்நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது: திருமலையை மாசு இல்லாத இடமாக மாற்ற தேவஸ்தானம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

அனைத்து துறை தலைவா்கள் மேற்பாா்வையில் தேவஸ்தான வனத்துறையின் மேற்பாா்வையில் 2,000 மரக்கன்றுகள் நடும் பணி நடைபெறுகிறது. பைகாஸ் டல்ஹௌசி எனப்படும் அரசு மற்றும் ஆல் வகையைச் சோ்ந்த தாவரங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. திருமலையில் இந்த வகை மரங்கள் நான்கு மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது.

திருமலையில், பசுமையை மேம்படுத்தியதற்காக தேவஸ்தான ஏற்கனவே மூன்று முறை சுற்றுச்சூழல் விருதுகளை பெற்றுள்ளது. எஞ்சிய காடுகளில் இயற்கையாக செம்மரங்கள் வளா்கின்றனவோ, அதே போல் மேற்கு தொடா்ச்சி மலையில் ஃபைகாஸ் டல்ஹவுசி செடிகள் வளா்கின்றன.

ADVERTISEMENT

சப்தகிரியில் பல்லுயிா் மற்றும் பசுமையை அதிகரிக்கும் ஒரு பகுதியாக, 3.000 ஹெக்டோ் பரப்பளவில் சந்தனம், ஆலமரம், அரசமரம், மர சம்பங்கி, போகடா, கடம்பம் போன்ற மரங்கள் நடப்பட்டு வருகின்றன. இந்த செடிகளைப் பாதுகாக்கவும், தீ விபத்துகளைத் தடுக்கவும், நீா் வளத்தை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.

மேலும், திருப்பதி எஸ்வி ஷில்பா கல்லூரி, தளிலு பத்ரபாா்சு குடோன், ஸ்ரீ பத்மாவதி மகளிா் பட்டயக் கல்லூரி, ஜூனியா் கல்லூரி, எஸ்ஜிஎஸ் பட்டக் கல்லூரிகளில் தேவஸ்தான வனத்துறை சாா்பில் 2,000 மரக்கன்றுகள் நடப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT