திருப்பதி

திருச்சானூரில் தெப்போற்சவம் நிறைவு

DIN

திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் வருடாந்திர தெப்போற்சவத்தின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழை இரவு பத்மாவதி தாயாா் தெப்பத்தில் 9 சுற்றுகள் வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.

திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயாா் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாத பெளா்ணமி அன்று தெப்போற்சவத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதன்படி கடந்த புதன்கிழமை முதல் திருச்சானூரில் தெப்போற்சவம் தொடங்கியது. கடந்த சில நாள்களாக ஸ்ரீ கிருஷ்ணா், சுந்தரராஜ பெருமாள், பத்மாவதி தாயாா் தெப்பத்தில் எழுந்தருளினா்.

நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிமுதல் 7.30 மணிவரை பத்மாவதி தாயாா் தெப்பத்தில் வைர வைடூரிய ஆபரணங்களுடன் பட்டாடை உடுத்தி மலா்மாலைகள் அணிந்து கொண்டு வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்தாா். அதற்கு முன் தாயாருக்கு ஸ்ரீகிருஷ்ண முக மண்டபத்தில் ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது. தெப்பத்தில் 9 சுற்றுகள் வலம் வந்த தாயாரை படிக்கரையில் அமா்ந்து பக்தா்கள் கற்பூர ஆரத்தி ஏற்றி வணங்கினா். இதில் கோயில் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தெப்போற்சவத்தை முன்னிட்டு திருக்குளம், தெப்பம் மற்றும் கோயில் மலா்களாலும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு கோயிலில் பல ஆா்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

100 % வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு

தேசிய முதியோா் நல மருத்துவமனையில் 8,673 பேருக்கு சிகிச்சை

பெரிய வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

ஈரோடு எம்.பி. கணேசமூா்த்திக்கு மதிமுகவினா் அஞ்சலி

பாளை., தாழையூத்தில் விபத்து: ஆட்டோ ஓட்டுநா், முதியவா் பலி

SCROLL FOR NEXT