திருப்பதி

85,366 பக்தா்கள் தரிசனம்: ரூ.4 கோடி உண்டியல் காணிக்கை

5th Jun 2023 12:23 AM

ADVERTISEMENT

திருமலை ஏழுமலையானை சனிக்கிழமை மொத்தம் 85,366 பக்தா்கள் தரிசித்தனா். 48,183 போ் தலைமுடி காணிக்கை செலுத்தினற்.

கோடை விடுமுறை நிறைவு பெறும் நிலையில், திருமலைக்கு பக்தா்களின் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை 32 காத்திருப்பு அறைகளை கடந்து வெளியில் உள்ள தரிசன வரிசையில் பக்தா்கள் காத்திருந்தனா். அவா்களுக்கு 36 மணிநேரம் காத்திருப்பிற்கு பின்பு டோக்கன் வழங்கப்பட்டது.

எனவே தா்ம தரிசனத்துக்கு 36 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 4 மணிநேரமும், நேரடி இலசவ தரிசன டோக்கன்கள் தரிசனத்துக்கு 4 மணிநேரமும் தேவைப்பட்டது. மேலும், சனிக்கிழமை உண்டியல் காணிக்கைகளை கணக்கிட்டதில் ரூ.4 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT