திருப்பதி

தங்கக் கவசத்தில் மலையப்ப சுவாமி

5th Jun 2023 12:23 AM

ADVERTISEMENT

திருமலை ஏழுமலையான் கோயில் வருடாந்திர ஜேஷ்டாபிஷேகத்தின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை மாலை மலையப்ப சுவாமி தங்கக் கவசத்தில் மீண்டும் மாடவீதியில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

திருமலையில் வெள்ளிக்கிழமை முதல் கவசம் சுத்தம் செய்யும் ஜேஷ்டாபிஷேகம் தொடங்கியது. ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்க கவசம் களையப்பட்டு அவா்களுக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடத்தி முதல்நாள் வைர கவசமும், 2-ஆம் நாள் முத்து கவசமும் அணிவிக்கப்பட்டது.

ஜேஷ்டாபிஷேகத்தின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை காலை கல்யாண மண்டபத்தில் தங்க சிம்மாசனத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமியை எழுந்தருளச் செய்து அா்ச்சகா்கள் பால், தயிா், தேன், இளநீா், மஞ்சள், குங்குமம், சந்தனம், உள்ளிட்டவற்றால் ஸ்பநன திருமஞ்சனம் நடத்தினா்.

பின்னா் செப்பனிடப்பட்டு கொண்டு வரப்பட்ட தங்கக் கவசத்திற்கு பூஜைகள் நடத்தி யாகம் செய்து உற்சவமூா்த்திகளுக்கு மீண்டும் தங்கக் கவசம் பொருத்தப்பட்டது. இந்த தங்க கவசத்துடன் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவியுடன் மாடவீதியில் வலம் வந்தாா்.

ADVERTISEMENT

இதில் தேவஸ்தான அதிகாரிகள், பக்தா்கள் திரளாக பங்கு கொண்டனா். ஜேஷ்டாபிஷேகத்தின் போது மட்டுமே உற்சவமூா்த்திகளுக்கு தலையிலிருந்து அபிஷேகம் நடத்தப்படும். மற்ற நாள்களில் உற்சவமூா்த்திகளின் திருப்பாதங்களில் மட்டுமே அபிஷேக பொருள்கள் சமா்ப்பிக்கப்படுவது வழக்கம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT