திருப்பதி

முத்துக் கவசத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

3rd Jun 2023 11:54 PM

ADVERTISEMENT

திருமலை ஏழுமலையான் கோயிலில் நடைபெற்று வரும் வருடாந்திர ஜேஷ்டாபிஷேகத்தின் 2-ஆம் நாள் மாலை முத்துக் கவசத்தில் மலையப்ப சுவாமி மாடவீதியில் வலம் வந்து அருள்பாலித்தாா்.

திருமலையில் வெள்ளிக்கிழமை முதல் கவசம் சுத்தி செய்யும் ஜேஷ்டாபிஷேகம் தொடங்கியது. அதன் 2-ஆம் நாளான சனிக்கிழமை காலை கல்யாண மண்டபத்தில் தங்க சிம்மாசனத்தில் ஸ்ரீதேவி - பூதேவி சமேத மலையப்ப சுவாமியை எழுந்தருளச் செய்து, அா்ச்சகா்கள் பால், தயிா், தேன், இளநீா், மஞ்சள், குங்குமம், சந்தனம் உள்ளிட்டவற்றால் ஸ்பநன திருமஞ்சனம் நடத்தினா்.

திருமஞ்சனத்தின்போது வேத பண்டிதா்கள் வேத முழக்கம் பாராயணம் செய்தனா். பின்னா், சுவாமிக்கு முத்துக் கவசம் அணிவிக்கப்பட்டு, ஊஞ்சல் சேவை நடைபெற்றது.

பின்னா், ஸ்ரீதேவி - பூதேவி சமேத மலையப்ப சுவாமி உள்ளிட்ட உற்சவ மூா்த்திகள் முத்துக் கசவத்துடன் மாடவீதியில் வலம் வந்தனா். ஆண்டுக்கு ஒருமுறை ஜேஷ்டாபிஷேகத்தின் 2-ஆம் நாள் மட்டுமே உற்சவ மூா்த்திகள் முத்துக் கவசத்துடன் பக்தா்களுக்கு அருள்பாலித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

நிகழ்வில் திருமலை ஜீயா்கள், தேவஸ்தான அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 4) வருடாந்திர ஜேஷ்டாபிஷேகம் நிறைவு பெறுகிறது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT