திருப்பதி

தரிசனத்துக்கு 24 மணி நேரம்

3rd Jun 2023 11:53 PM

ADVERTISEMENT

திருமலை ஏழுமலையானை தா்ம தரிசனத்தில் தரிசிக்க பக்தா்கள் சனிக்கிழமை காலை 24 மணி நேரம் காத்திருந்தனா்.

திருமலையில் தற்போது வாரத்தின் அனைத்து நாள்களிலும் பக்தா்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. சனிக்கிழமை காலை 32 காத்திருப்பு அறைகளைக் கடந்து வெளியில் உள்ள தரிசன வரிசையில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருந்தனா். அவா்களுக்கு 24 மணி நேரம் காத்திருப்புக்குப் பின்னா், தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது.

எனினும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 4 மணி நேரமும், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 4 மணி நேரமும் தேவைப்பட்டன.

காத்திருப்பு அறைகள் மற்றும் தரிசன வரிசைகளில் பக்தா்களுக்கு உணவு, பால், குடிநீா் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

வெள்ளிக்கிழமை முழுவதும் 76,963 பக்தா்கள் ஏழுமலையானை தரிசித்தனா். 37,422 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கணக்கிட்டதில், ரூ.2.97 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT