திருப்பதி

அனுமந்த வாகனத்தில் கோவிந்தராஜ சுவாமி வலம்

DIN

திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவத்தின் 6-ஆம் காலை அனுமந்த வாகனத்தில் மாட வீதியில் சுவாமி வலம் வந்தாா்.

திருப்பதியில் உள்ள தேவஸ்தானத்துக்குச் சொந்தமான கோவிந்தராஜ சுவாமி கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 6-ஆம் நாளான புதன்கிழமை காலை அனுமந்த வாகனத்தில் கோதண்டராம சுவாமி அலங்காரத்தில் கோவிந்தராஜ சுவாமி மாட வீதியில் வலம் வந்தாா்.

மாட வீதியில் வலம் வந்த களைப்பைப் போக்க ஸ்ரீதேவி - பூதேவி சமேத கோவிந்தராஜ சுவாமிக்கு மூலிகை கலந்த நீா், பால், தயிா், இளநீா், தேன், பழரசம், மஞ்சள், சந்தனம் உள்ளிட்டவற்றால் ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது. திருமஞ்சனத்துக்குப் பின்னா், மாலை உற்சவ மூா்த்திகள் கோயில் மண்டபத்தில் ஊஞ்சல் சேவை கண்டருளினா்.

பின்னா், இரவு யானை வாகனத்தில் கோவிந்தராஜ சுவாமி மாடவீதியில் வலம் வந்தாா். வாகன சேவைக்கு முன்னும் பின்னும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் திருமலை ஜீயா்கள், கோயில் அதிகாரிகள் மற்றும் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

SCROLL FOR NEXT