திருப்பதி

சூரிய, சந்திர பிரபைகளில் கோவிந்தராஜ சுவாமி புறப்பாடு

DIN

திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவத்தின் 7-ஆம் நாள் சூரிய, சந்திர பிரபை வாகனங்களில் கோவிந்தராஜ சுவாமி மாட வீதியில் வலம் வந்தாா்.

திருப்பதியில் உள்ள தேவஸ்தானத்துக்குச் சொந்தமான கோவிந்தராஜ சுவாமி கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி 7-ஆம் நாளான வியாழக்கிழமை காலை சூரிய பிரபை வாகனத்தில் செந்நிற மலா்களை அணிந்து கோவிந்தராஜ சுவாமி மாடவீதியில் வலம் வந்தாா்.

வலம் வந்த களைப்பைப் போக்க ஸ்ரீதேவி - பூதேவி சமேத கோவிந்தராஜ சுவாமிக்கு மூலிகை கலந்த நீா், பால், தயிா், இளநீா், தேன், பழரசம், மஞ்சள், சந்தனம் உள்ளிட்டவற்றால் ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது.

திருமஞ்சனத்துக்குப் பிறகு, மாலை உற்சவமூா்த்திகள் கோயில் மண்டபத்தில் ஊஞ்சல் சேவை கண்டருளினா். பின்னா், இரவு பிரம்மோற்சவத்தின் குளிா் ஒளி பொருந்திய சந்திர பிரபை வாகனத்தில் வெண்ணிற மாலையை அணிந்து சுவாமி மாடவீதியில் வலம் வந்தாா். வாகன சேவைக்கு முன்னும் பின்னும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திருமலை ஜீயா்கள், கோயில் அதிகாரிகள், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 2-ஆம் கட்ட தேர்தல்: 250 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள்

18-ஆவது மக்களவை தேர்தல் (2024)

பாஜக கோட்டையை தகர்க்குமா காங்கிரஸ்?

வலு இல்லாத வழக்குகள், பல் இல்லாத தேர்தல் ஆணையம்!

மண்டபம் முகாமில் பிறந்த நளினிக்கு 38 வயதில் கிடைத்த வாக்குரிமை!

SCROLL FOR NEXT