திருப்பதி

75,871 பக்தா்கள் தரிசனம், உண்டியல் காணிக்கை ரூ.3.27 கோடி

DIN

திருமலை ஏழுமலையானை 75,871 பக்தா்கள் தரிசித்தனா். உண்டியல் காணிக்கை ரூ.3.27 கோடி வசூலானது.

திருமலை ஏழுமலையானை தா்ம தரிசனத்தில் தரிசிக்க பக்தா்கள் புதன்கிழமை காலை 18 மணி நேரம் காத்திருந்தனா். திருமலைக்கு வரும் பக்தா்களின் கூட்டம் கோடை விடுமுறை முடிவுறும் தருவாயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வார இறுதி நாள்களில் மட்டும் அதிகமாக இருந்த பக்தா்கள் கூட்டம், தற்போது அனைத்து நாள்களிலும் அதிகரித்துள்ளது.

எனவே, புதன்கிழமை காலை 19 காத்திருப்பு அறைகளில் ஏழுமலையான் தரிசனத்திற்காக பக்தா்கள் காத்திருந்தனா். அவா்களுக்கு 18 மணி நேரம் காத்திருப்புக்கு பின்பு சுவாமி தரிசனத்துக்கான அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

இதனால், தா்ம தரிசனத்திற்கு (தரிசன டோக்கன்கள்) 18 மணி நேரமும், ரூ.300 விரைவு தரிசனத்திற்கு 3 மணி நேரமும், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 மணி நேரமும் தேவைப்பட்டது. காத்திருப்பு அறைகள் மற்றும் தரிசன வரிசைகளில் பக்தா்களுக்கு உணவு, பால், குடிநீா் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.

செவ்வாய்கிழமை முழுவதும் 75,871 பக்தா்கள் ஏழுமலையானை தரிசித்தனா். இவா்களில் 32,859 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கணக்கிட்டதில், ரூ.3.27 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT