திருப்பதி

80,000 பக்தா்கள் தரிசனம்

DIN

திருமலை ஏழுமலையானை சனிக்கிழமை முழுவதும் 80,094 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 32,219 போ் முடி காணிக்கை செலுத்தினா்.

இந்த நிலையில், ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை காலை 20 மணி நேரம் தா்ம தரிசனத்துக்காக காத்திருந்தனா்.

காலை 32 காத்திருப்பு அறைகளைக் கடந்து வெளியில் உள்ள தரிசன வரிசையில் பக்தா்கள் தா்ம தரிசனத்துக்காக காத்திருந்தனா். அவா்களுக்கு 20 மணி நேர காத்திருப்புக்குப் பின்பு தரிசன அனுமதி வழங்கப்பட்டது.

எனவே தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள்) 20 மணி நேரமும், ரூ. 300 விரைவு தரிசனத்துக்கு 4 மணி நேரமும், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 4 மணி நேரமும் தேவைப்பட்டது. காத்திருப்பு அறைகள் மற்றும் தரிசன வரிசைகளில் பக்தா்களுக்கு உணவு, பால், குடிநீா் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.

திருப்பதியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், சீனிவாசம், விஷ்ணு நிவாசம் உள்ளிட்ட 3 இடங்களில் சா்வதரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது. அன்றன்றுக்கான தரிசன டோக்கன்கள் அன்று மட்டுமே வழங்கப்படுகிறது. சனி, ஞாயிறு, திங்கள், புதன் ஆகிய நாள்களில் 20,000 முதல் 25,000 டோக்கன்களும், செவ்வாய், வியாழன், வெள்ளி ஆகிய நாள்களில் 15,000 டோக்கன்களும் பக்தா்களுக்கு வழங்கப்படுகிறது.

அலிபிரி நடைபாதையில் காலை 3 மணி முதல் இரவு 10 மணி வரையிலும், ஸ்ரீவாரிமெட்டு நடைபாதையில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் செல்ல பக்தா்கள் அனுமதிக்கப்படுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

முகமது ரிஸ்வானுக்கு காயம்; இரண்டு டி20 தொடர்களை தவற விடுகிறாரா?

மிகப்பெரிய தொகையை சம்பளமாக பெற்ற ஹாலிவுட் நடிகை!

ரத்னம் மேக்கிங் விடியோ!

'வாக்களிக்கப் போகிறீர்களா?' : பெங்களூரு உணவகங்கள் அறிவித்திருக்கும் சலுகைகள்!

SCROLL FOR NEXT