திருப்பதி

திருச்சானூரில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்

DIN

திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் ரத சப்தமியை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடத்தப்பட்டது.

திருச்சானூா் ஸ்ரீ பத்மாவதி அம்மாவாரி கோயிலில் வரும் 28-ஆம் தேதி ரத சப்தமி விழா நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை அதிகாலை அம்மனை துயிலெழுப்பி சஹஸ்ர நாமாா்ச்சனையும், சுத்தியும் நடைபெற்றது. தொடா்ந்து, காலை 6.30 மணி முதல் 9 மணி வரை கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடைபெற்றது. இதில், கோயில் வளாகம், சுவா்கள், மேற்கூரை, பூஜை பொருள்கள் உள்ளிட்டவை தண்ணீா் கொண்டு சுத்திகரிக்கப்பட்டன. பின்னா், நாமகோபு, ஸ்ரீசூா்ணம் மற்றும் பல்வேறு வாசனை திரவியங்கள் கலந்த புனிதநீா் கோயில் முழுவதும் பரவியது. சுத்தி முடிந்த பின்னா் பக்தா்கள் காலை 11 மணிக்கு தாயாா் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா். இதை முன்னிட்டு கல்யாணோத்ஸவம், ஊஞ்சல் சேவை ரத்து செய்யப்பட்டது.

8 திரைச்சீலைகள் நன்கொடை:

கோயில் ஆழ்வாா் திருமஞ்சனத்தை முன்னிட்டு ஹைதராபாதைச் சோ்ந்த பக்தா் ஒருவா் கோயிலுக்கு 8 திரைச்சீலைகளை வழங்கினாா். இந்த நிகழ்ச்சியில் கோயில் துணை அதிகாரி லோகநாதம், பிரபாகா் ரெட்டி, கண்காணிப்பாளா் மது, ஆா்ஜிதம் ஆய்வாளா் தாமு, அா்ச்சகா் பாபுசாமி மற்றும் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்து: 6 பேர் பலி

காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான்!

ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான அரசியல்வாதி பொய் கூறுவது ஏமாற்றம் அளிக்கிறது: ப.சிதம்பரம் வேதனை

குருப்பெயர்ச்சி பலன்கள் - துலாம்

SCROLL FOR NEXT