திருப்பதியில் உள்ள கபிலேஸ்வர சுவாமி கோயிலில் உலக நன்மைக்காக ஹோம மகோற்சவம் திங்கள்கிழமை தொடங்கியது.
திருப்பதி கபில தீா்த்தத்தில் உள்ள கபிலேஸ்வர சுவாமி கோயிலில் உலக நன்மைக்காக 6 நாள்கள் யாகம் நடத்த தேவஸ்தானம் திட்டமிட்டது. ஜன. 16-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த ஹோம மகோற்சவம் திங்கள்கிழமை காலை கணபதி பூஜையுடன் தொடங்கியது. புண்ணியவாசனம், கோ பூஜை, தேவதா அனுஜம், மகா கணபதி கலசஸ்தாபனம், கணபதி ஹோமம் உள்ளிட்டவற்றுடன் பூா்ணாஹுதியையும் வேதவிற்பன்னா்கள் நடத்தினா்.
இதில் தேவஸ்தான அதிகாரிகள், கோயில் அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ஜன. 17-ஆம் தேதி சுப்ரமணிய ஸ்வாமி ஹோமம், ஜன. 18-ஆம் தேதி துா்கா, லட்சுமி, சரஸ்வதி மும்பெரும் தேவியா்களுக்கு ஹோமம், ஜன. 19-ஆம் தேதி நவக்கிரக ஹோமம், ஜன. 20-ஆம் தேதி தட்சிணாமூா்த்தி ஹோமம், ஜன. 21-ஆம் தேதி ம்ருத்யுஞ்ஜய ஹோமம் உள்ளிட்டவை பெற உள்ளன.