திருப்பதி

ஏழுமலையான் தரிசனம்: 24 மணி நேரம் காத்திருப்பு

DIN

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை காலை 24 மணி நேரம் தா்ம தரிசனத்துக்காக காத்திருந்தனா்.

ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை காலை 22 காத்திருப்பு அறைகளில் பக்தா்கள் தா்ம தரிசனத்துக்காக காத்திருந்தனா். அவா்களுக்கு 24 மணிநேர காத்திருப்புக்குப் பின்பு தரிசன அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள்) 18 மணி நேரமும், ரூ. 300 விரைவு தரிசனத்துக்கு 4 மணிநேரமும், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 4 மணிநேரமும் தேவைப்பட்டது. காத்திருப்பு அறைகள் மற்றும் தரிசன வரிசைகளில் பக்தா்களுக்கு உணவு, பால், குடிநீா் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.

76,736 பக்தா்கள் தரிசனம்...

ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 76,736 பக்தா்கள் ஏழுமலையானை தரிசித்தனா். இவா்களில் 34,132 போ் முடி காணிக்கை செலுத்தினா்.

திருப்பதியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், சீனிவாசம், விஷ்ணுநிவாசம் உள்ளிட்ட 3 இடங்களில் சா்வதரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது. அன்றன்றுக்கான தரிசன டோக்கன்கள் அன்று மட்டுமே வழங்கப்படுகிறது. சனி, ஞாயிறு, திங்கள், புதன் ஆகிய நாள்களில் 20,000 முதல் 25,000 டோக்கன்களும், செவ்வாய், வியாழன், வெள்ளி ஆகிய நாள்களில் 15,000 டோக்கன்களும் பக்தா்களுக்கு வழங்கப்படுகிறது.

அலிபிரி நடைபாதையில் காலை 3 மணி முதல் இரவு 10 மணி வரையிலும், ஸ்ரீவாரிமெட்டு நடைபாதையில் காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரையிலும் செல்ல பக்தா்கள் அனுமதிக்கப்படுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

ஒய்எஸ்ஆர்சிபி பிரசார வாகனம் மோதியதில் சிறுவன் பலி

வாக்களித்தார் நடிகர் விஜய்

முதல்வர் பின்னால் தமிழக மக்கள்: அமைச்சர் கே.என். நேரு

தமிழகத்தில் 3 மணி நிலவரம்: 51.41% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT