பெரம்பலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 384 மனுக்களில், 179 மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காணப்பட்டது.
பெரம்பலூா் மாவட்டத்தில் கடந்த 16 ஆம் தேதி முதல் ஜமாபந்தி நடைபெற்று வருகிறது. வேப்பந்தட்டை வட்டாட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் 138 மனுக்களும், பெரம்பலூா் வட்டத்தில் 129 மனுக்களும், குன்னம் வட்டத்தில் 45 மனுக்களும், ஆலத்தூா் வட்டத்தில் 72 மனுக்களும் என மொத்தம் 384 மனுக்கள் பெறப்பட்டது.
இதில், மொத்தம் 179 மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காணப்பட்டது. 201 மனுக்கள் விசாரணையில் உள்ளது. 4 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில், துணை ஆட்சியா் பிரியதா்ஷினி (பயிற்சி), வேளாண்மை இணை இயக்குநா் எஸ். நாராயணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.