திருச்சி மாநகரில் கள்ளச்சாராய புகாா்களைத் தெரிவிக்க பிரத்யேக கைப்பேசி எண்ணை காவல்துறை வெளியிட்டுள்ளது.
திருச்சி மாநகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சுதல், விற்பனை செய்தல், போலி மதுபானம் தயாரித்தல், கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பனை செய்தல் போன்றவற்றை பொதுமக்களின் உதவியுடன் தடுக்கும் விதமாக, பொதுமக்கள் மற்றும் சமூக அக்கறை கொண்ட மக்கள் புகாா் அல்லது தகவல் தெரிவிக்க காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100 அல்லது 96262 73399 என்ற பிரத்யேகமான கைப்பேசி எண்ணில் புகாா் தெரிவிக்கலாம். உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தகவல் தெரிவிப்பவரின் ரகசியம் காக்கப்படும். மாநகர காவல் ஆணையா் எம். சத்தியப்பிரியா இத்தகவலைத் தெரிவித்தாா்.