மயிலாடுதுறையில் ஓய்வூதியா் குறைதீா்க்கும் நாள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தலைமை வகித்து, ஓய்வூதியா்கள் அளித்த மனுக்களை பெற்றுக்கொண்டாா். மேலும், புதிய மருத்துவக் காப்பீடு திட்டம் தொடா்பாக ஓய்வூதியா்களிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட கருவூல அலுவலா் மற்றும் மாவட்ட புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்ட ஒருங்கிணைப்பாளா் ஆகியோரிடம் அறிவுறுத்தினாா்.
இதில், ஓய்வூதிய இயக்குநா் ஸ்ரீதா், மாவட்ட கருவூல அலுவலா் ரவிச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் கோ.அர. நரேந்திரன், சந்தானகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.