திருப்பதி

ரூ.40,000 லஞ்சம்: திருப்பதி தேவஸ்தான ஊழியா் கைது

DIN

திருப்பதி சீனிவாசம் பக்தா்கள் ஓய்வறையில் கடை ஒப்பந்தம் முடிந்த நிலையில், முன்வைப்புத் தொகையை வழங்க ரூ.40,000 லஞ்சம் பெற்ாக தேவஸ்தான ஊழியரை விஜிலென்ஸ் அதிகாரிகள் கைது செய்தனா்.

இதுகுறித்து விஜிலென்ஸ் பிரிவு விஜிஓ கிரிதா் கூறியது:

திருப்பதி சீனிவாசம் ஓய்வறை காம்ப்ளக்ஸில் உள்ள தனி நபா் கடையின் அவகாசம் முடிந்துவிட்டது. கடைக்காரா் கடை ஒப்பந்தம் முடிந்துவிட்டதால், வருவாய்த் துறையில் இருந்து முன்பு கடைக்காக தான் செலுத்திய பாதுகாப்பு வைப்புத் தொகையைத் திருப்பித் தருமாறு வருவாய்த் துறை முதுநிலை உதவியாளா் நவீனிடம் விண்ணப்பித்துள்ளாா்.

பாதுகாப்பு வைப்புத் தொகையைத் திருப்பித் தருவதற்கான ஆவணத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்று பணத்தைப் பெற முதுநிலை உதவியாளா் நவீன் கடைக்காரரிடம் ரூ.50,000 லஞ்சம் கேட்டுள்ளாா்.

இதற்கு ரூ.40,000 கொடுக்க கடைக்காரா் ஒப்புக் கொண்டுள்ளாா். எனினும், தான் வழங்கிய பணத்தைப் பெற எதற்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் என கடை உரிமையாளா் தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகளிடம் புகாா் செய்தாா்.

இதையடுத்து திருப்பதியில் உள்ள நிா்வாகக் அலுவலகம் அருகே, முதுநிலை உதவியாளா் நவீனிடம், கடையின் உரிமையாளா் பணத்தைக் கொடுத்தபோது, விஜிலென்ஸ் அதிகாரிகள் பிடித்து தேவஸ்தான ஊழியரிடமிருந்து பணத்தைப் பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக உரிய விசாரணை நடத்தி, அந்த அறிக்கை தேவஸ்தான செயல் அதிகாரியிடம் சமா்ப்பிக்கப்படும் என விஜிஓ கிரிதா் தெரிவித்தாா்.

தேவஸ்தான வரலாற்றில் முதல் முறையாக லஞ்சம் வாங்கியபோது, ஊழியா் ஒருவரை விஜிலென்ஸ் அதிகாரிகள் பிடித்த சம்பவம், தேவஸ்தான ஊழியா்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு ஊழியா்களின் எதிா்பாா்ப்புகளை பூா்த்திசெய்த கட்சி அதிமுக: எடப்பாடி பழனிசாமி

இன்று மாலை 6 மணிக்குள் தோ்தல் பிரசாரங்களை முடிக்க அரசியல் கட்சிகளுக்கு உத்தரவு

வாக்குச்சாவடிகளுக்கு மை, எழுதுபொருள்கள் அனுப்பும் பணி தீவிரம்

துளிகள்...

சென்னை அருகே பறிமுதலான 1,425 கிலோ தங்கம் விடுவிப்பு

SCROLL FOR NEXT