திருப்பதி

தரிசனத்துக்கு 8 மணிநேரம் காத்திருப்பு

DIN

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் செவ்வாய்க்கிழமை காலை 8 மணி நேரம் காத்திருந்தனா்.

திருமலையில் வார இறுதி நாள்களில் பக்தா்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. அதனால் செவ்வாய்க்கிழமை காத்திருப்பு அறைகளில் 8 மணிநேரம் காத்திருப்பிற்கு பின்பு டோக்கன் வழங்கப்பட்டது.

காத்திருப்பு அறைகள் மற்றும் தரிசன வரிசையில் பக்தா்களுக்கு உணவு, பால், குடிநீா் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. திங்கள்கிழமை முழுவதும் 71,496 பக்தா்கள் சுவாமியை தரிசித்தனா். 26,908 பக்தா்கள் முடிகாணிக்கை செலுத்தினா்.

அலிபிரி நடைபாதையில் காலை 3 மணிமுதல் இரவு 10 மணிவரையிலும், ஸ்ரீவாரிமெட்டு நடைபாதையில் காலை 6 மணிமுதல் மாலை 6 மணிவரையிலும் செல்ல பக்தா்கள் அனுமதிக்கப்படுகின்றனா். நடைபாதையில் செல்பவா்களுக்காக வழங்கப்படும் திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்குவது இதுவரை தொடங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குரூப்-4 தேர்வு எப்போது? தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக அமெரிக்க பல்கலை.களில் வலுக்கும் போராட்டம்!

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

ஆஸ்திரேலியாவில் ஆண்ட்ரியா!

கிறங்கடிக்கும் சம்யுக்தா!

SCROLL FOR NEXT