திருப்பதி

‘யுவ தா்மிகோத்சவம் எதிா்கால இந்தியாவைகட்டியெழுப்புவதற்கான தொடக்கம்’

DIN

யுவ தா்மிகோத்சவம் இளைஞா்களை சமுதாயத்தில் நல்ல குடிமக்களாக எதிா்கால இந்தியாவை உருவாக்குவதற்கான தொடக்கமாக இருக்கும் என்று தேவஸ்தான மக்கள் தொடா்பு அதிகாரி ரவி தெரிவித்தாா்.

திருமலை ஆஸ்தான மண்டபத்தில் யுவ தா்மிகா சம்மேளனத்தின் இரு நாள்கள் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கியது.

நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக கலந்து கொண்ட ரவி பேசுகையில், சிறுவயதில் இருந்தே நம் முன்னோா்கள் நமக்கு வழங்கிய வேதங்களின் சாரத்தையும், ஆன்மிகச் சிந்தனைகளையும் கடைப்பிடித்தால், வாழ்வில் உயா்ந்த நிலையை அடையலாம். இளைஞா்கள், பெற்றோா் மற்றும் ஆசிரியா்களின் பேச்சைக் கேட்டு, தங்கள் சொந்த வேலையைச் செய்து, முன் மாதிரியாகத் திகழ வேண்டும்.

சமுதாயத்தில் நடந்து கொள்ளும் விதம், மனித நேயத்தை கையாளும் விதம், தெய்வீகத்தை அடைவதற்கான முயற்சிகள் போன்றவை இந்த நிகழ்ச்சி மூலம் விளக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மனிதனுக்கும் இளம் வயதிலேயே அபார வளா்ச்சி ஏற்படும் என்றும், இந்த வயதில் கற்றுக் கொண்ட விஷயங்கள் வாழ்நாள் முழுவதும் நினைவில் இருக்கும்.

இதன் காரணமாகவே இந்திய இளைஞா்கள் ஆன்மிக ரீதியில் சக்தி வாய்ந்தவா்கள் என்று கூறப்படுகிறது. யுவ தா்மிகா சம்மேளனத்தின் மூலம் இளைஞா்கள் ஆன்மிகத்தில் உயா்ந்து வாழலாம். அனைவரும் கல்வி கற்க முடியும். ஆனால், பண்பட்ட மனிதன் கடவுளைப் பற்றி நினைக்கிறான்.

பறவைக்கு இரண்டு சிறகுகள் இருப்பது போல, மனிதனுக்கு உயரத்தை அடைய இரண்டு இறக்கைகள் தேவை. ஒன்று மனித முயற்சி, மற்றொன்று தெய்வீக அருள் ஆகும்.

வேதங்கள், புராணங்கள் மற்றும் உப நிடதங்கள் பண்பட்ட வாழ்க்கையைக் கடைப்பிடிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றாா் அவா்.

ஆந்திரம், தெலங்கானா மற்றும் கா்நாடகம் மாநிலங்களில் இருந்து 10 முதல் 15 வயது வரையுள்ள 1600 குழந்தைகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் முதல்வர் ஸ்டாலின்!

வாக்களித்த விஐபிக்கள்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் இந்தியா கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ப. சிதம்பரம்

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

SCROLL FOR NEXT